செல் ட்ரேக்கர் என்பது ஒரு இலவச கைபேசி கண்காணிப்பு செயலி ஆகும். இது உங்கள் கைபேசி தவறினாலோ, அல்லது உங்களுக்கும் உங்கள் கைபேசிக்கும்   தொடர்பில்லாத மூன்றாம் நபர் அதனை இயக்க முயன்றாலோ , அதை கொண்டு எந்த ஒரு தவறும் இழைக்க முடியா வண்ணம் வழி செய்வதாக  இந்த செயலி அமைந்துள்ளது. இது நீங்கள் தவறவிட்ட உங்கள் கைபேசியின் இருப்பிடத்தையும் கண்டறிய உதவுகிறது. மேலும் மூன்றாம் நபர் உங்கள் சுய விவரங்களை பார்வையிடுவதையும் தடுக்க  பயன்படுகிறது.மேலும் களவாட பட்ட கைபேசியில் சிம் மாற்றம் செய்யபட்டால் அந்த செயலியில் இணைக்க பெற்றுள்ள இணைப்பு எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது.இதன் மூலம் உங்கள் கைபேசியினை வேறு நபர்களோ , திருடர்களோ இயக்க முடியா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் சிறப்பம்சங்கள்

  • குறைந்த விலையில் எண்ணற்ற அம்சங்கள்
  • இயக்குவதற்கு வெகு சுலபமாக உள்ளது
  • உங்கள் குழந்தைகள் மற்றும் உழியர்களின் இணைய  நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிக்க இயலும்.
  • நீங்கள் கண்காணிக்க நினைக்கும் கைபேசி சாதனத்திற்கு வரும் அழைப்புகள், மற்றும் அந்த சாதனத்திலிருந்து செய்யப்பட்ட அழைப்புகளை கண்காணிக்க இயலும்.
  • ஆயிரதிற்கும் பெறப்பட்ட வடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
  • ஆண்ட்டிராய்டு 10 மற்றும் அதற்கும் மேற்பட்ட இயங்குதளத்திற்கு பொருந்த கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.

இந்த செயலியின் விரிவான அம்சங்கள் :

குறுஞ்செய்திகள் (SMS/MMS)

                இந்த செயலி நீங்கள் கண்காணிக்க விரும்பும் கைபேசியில் உள்ள அணைத்துவகையான குறுஞ்செய்திகள் கண்காணிக்க உதவுகிறது.இதன் மூலம் கைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட தரவுகளையும் மீட்டெடுக்க உதவுகின்றன.

இந்த செயலியின்  பயன்பாடுகள் :

SMS /MMS – குருஞ்செய்திகள்

  • SMS /MMS போன்ற குறுஞ்செய்திகளின் உள்ளடக்கத்தை படிக்க இயலும்.
  • குறுஞ்செய்தியின் வகை, மற்றும் அதனை அனுப்பியவர் மற்றும் பெறப்பட்டவரின் விவரங்களை அறிய இயலும்.
  • குறுஞ்செய்தி அனுப்பியவர் மற்றும் அதனை பெற்றவரின் பெயர் மற்றும் விவரங்களை அறிய இயலும்.
  • குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட நேரத்தினை அறிய இயலும்.
  • குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட கைப்பேசின் இருப்பிடம் மற்றும் GPS ஒருங்கினைப்புகளை கண்டறிய முடியும்.

அழைப்புகள் (calls ):

            செல் ட்ரேக்கர் செயலியை கொண்டு நீங்கள் கீழ்க்காணும்   வசதிகளை பெறலாம்

  • அழைப்புகள் மேற்கொள்ள பட்ட கால அளவுகளை கண்டறிய இயலும்.
  • அழைப்பின் வகை (அழைத்தது , தவறியது, வந்த அழைப்புகள் ) அறிய உதவுகிறது.
  • அழைப்பு மேற்கொண்டோரின் அலைபேசி எண் மற்றும் அவர் பெயரினை தெரிந்து கொள்ள இயலும்.

ஜி.பி.எஸ் இருப்பிடம் (G.P.S)

            நீங்கள் கண்காணிக்க விரும்பும் சாதனத்தின் தற்போதைய இருப்பிட நிலையையும் அறியலாம்.அது இதற்கு முன் எங்கெல்லாம் இருந்தது என கண்டறிய இயலும்.

புகைப்படங்கள் (Photos):

             இந்த செயலியின் மூலம் நீங்கள் கண்காணிக்கும் அலைபேசியில் உள்ள புகைப்படங்களை பார்க்கலாம் . புகைப்பட செயலியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ,மற்றும் இணயத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்கள் , வேறு நபர்களுக்கு அனுப்பிய மற்றும் பெறப்பட புகைப்படங்கள் போன்றவற்றை கண்காணிக்கலாம்.

தொலைதூர இயக்கி (Remote Control)

            இந்த செயலின் மூலம் தொலைதூரத்தில் இருந்து கொண்டே , உங்களின் அலைபேசியின் கோப்புகளை பார்வையிடுதல், கோப்புகளை நீக்குதல் , அழிதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள இயலும்.

நேரலை காட்சி (Live Screening)

            இந்த செயலி உங்கள் அலைபேசி களவாட பட்டுள்ள சமயத்தில் , உங்கள் அலைபேசியில் நடைபெறும் எல்லா நடவடிக்கைகளையும் நேரலையில் கண்காணிக்க இயலும்.

கோப்பு நிர்வாகி (File Manager):

            மேலும் இச்செயலி உங்கள் கோப்பு நிர்வாகம் செய்யும் கோப்பு நிர்வாகியை இங்கிருந்த நிலையிலேயே இயக்க உதவுகிறது.

திட்டமிடப்பட்ட தடுப்புகள் (Schedule restriction):

            இந்த செயலி உங்களுக்கு அறிமுகம் இல்லாத மற்றும் மூன்றாம் நபர் உங்கள் கைபேசியினை இயக்குவதை தடை செய்கிறது.

வலைத்தளங்கள் (websites) :

            இந்த செயலி மூலம் உங்கள் அலுவல பணியாளரோ,வீட்டில் உள்ள உங்கள் குழந்தைகளோ முறையற்ற மற்றும் தேவையற்ற வலைபக்கங்களை பார்வை இடுவதை தவிர்க்க இயலும்.

நாள்க்காட்டி (calender

            இந்த செயலி நீங்கள் கண்காணிக்க விரும்பும் அலைபேசியில் பதிவிட பட்டுள்ள நாட்காட்டியில் உள்ள நிகழ்வுகள் மற்றும் பிறந்தநாள் குறிப்புகளை கண்காணிக்க இயலும்.

தொடர்புகள் (contacts)

            இந்த செயலியின் உதவியோடு நீங்கள் கண்காணிக்க விரும்பும் அலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொடர்புகளையும் பார்வையிட இயலும்.

பகுப்பாய்வு கருவிகள் (Analytical tool)

            இந்த செயலி உங்கள் அலைபேசியின் நடவடிக்கைகளை பல்வேறு பரிணாமத்தில் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.உதாரணமாக நீங்கள் கண்காணிக்கும் கைபேசியில் அதிகம் பார்வையிடப்பட்ட வலைத்தள முகவரிகள் , அதன் பார்வை நேரம் போண்டவற்றை ஆராய இயலும். மேலும் இதுபோன்ற பல்வகை அம்சங்களை உள்ளடக்கியதாய் இருக்கிறது இந்த செயலி.